FLASH NEWS

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) தமுமுக குவைத் மண்டல இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.------

02 July 2016

தமுமுக குவைத் மண்டலம் நடத்திய மாபெரும் இரண்டாம் இப்தார் நிகழ்வு பாஹஹில் பகுதி...

இறைவனின் திருப்பெயாரால்..

தமுமுக குவைத் மண்டலம் நடத்திய மாபெரும் இரண்டாம் இப்தார் நிகழ்வு பாஹஹில் பகுதி...

தமுமுக குவைத் மண்டலம் சார்பாக நேற்று 01-07-2016 (வெள்ளி கிழமை) மங்காப் டீச்சர் சொசைட்டியில் மிகவும் சிறப்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமுமுக மண்டல பொருளாளர் சகோ: அப்துல் சுக்கூர் அவர்கள் கிரத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

மண்டல தமுமுக செயலாளர் சகோ: ஜபருல்லாகான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

மண்டல தலைவர் பாரூக் மகராஜ் அவர்கள் தலைமை தாங்கினார், மண்டல ஆலோசகர் செய்யது பாஷா, மமக துணை செயலாளர் சென்னை தர்மபிரகாஷ், மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ: பெருவலனல்லூர் காசிம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.

ஆலீம் நூஹ் மஹ்லறி அவர்களும் மமக குவைத் மண்டல் செயலாளர் பந்தல்குடி சம்சுதீன் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
 
இருதியாக கலந்துகொண்ட அனைவருக்கும் இப்தார் உணவு வழங்கப்பட்டது தமுமுக குவைத் மண்டல துணை செயலாளர் சகோ: கமருதீன் அவர்களின் நன்றியுரையுடன் இப்தார் நிகழ்ச்சி முடிவுபெற்றது.     

அல்ஹம்துலில்லாஹ்.... எல்லா புகழும் இறைவனுக்கே...

என்டென்றும் மக்கள் பணியில் 
சமுதாய ஊழியர்கள் 
தமுமுக குவைத் மண்டலம்.
தொடர்புக்கு: 66265063, 55078876, 50509277, 66265063





17 June 2016

தமுமுக நடத்திய மாபெரும் இப்தார் நிகழ்ச்சி...!!!

தமுமுக நடத்திய மாபெரும் இப்தார் நிகழ்ச்சி...!!!

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் – இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) சார்பாக நேற்று 10-06-2016 மாலை குவைத் சிட்டியில் உள்ள அலி டவர் பராகான் உணவகத்தில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு குவைத் மண்டல தமுமுக-மமக மண்டல தலைவர் தஞ்சை பாரூக் மகாராஜ் தலைமை தாங்கினார்கள்.

மண்டல மமக செயலாளர் பந்தல்குடி சம்சுதீன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, மண்டல பொருளாளர் அப்துல் சுக்கூர் கிராத் ஓதி நிகழ்ச்சியை ஆரம்பம் செய்தார்கள்.

நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சிக்கு தமுமுக மண்டல செயலாளர் லால்குடி ஜபாருல்லாகான் மற்றும் மமக மண்டல துணை செயலாளர் சென்னை தர்மபிரகாசம் இருவரும் முன்னிலை வகித்தனர்.

மண்டல தமுமுக துணை செயலாளர் எருமப்பட்டி கமருதீன் அவர்கள் வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

சிறப்புரையாக தாயகத்தில் இருந்து வருகை புரிந்த மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா அவர்கள் நோன்பின் மாண்புகளையும் மற்றும் இஸ்லாமிய அரசியலும் முஸ்லீம்களும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

IGC சிறப்பு விருந்தினர் மௌவ்லவி ஆசிக் பிர்தௌசி அவர்கள் நற்செயல்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
டிவிஎஸ் குழுமம் நிறுவனர் Dr. TVS ஹைதர் அலி அவர்கள் நோன்பின் மருத்துவம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மிகவும் சிறப்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்வில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமுமுக மமக சகோதர்கள், ஜமாத்தார்கள் மற்றும் பிறஅமைப்பு சகோதர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக தமுமுக மண்டல கல்விக்குழு செயலாளர் தஞ்சை செய்யது முகமது அக்பர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்..

அல்ஹம்துலில்லாஹ், எல்லாம் புகழும் இறைவனுக்கே.

என்றென்றும் மக்கள் பணியில்

சமுதாய ஊழியர்கள் 
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் 
இஸ்லாமிய பிரச்சார பேரவை-IPP
குவைத் மண்டலம்.
தொடர்புக்கு:66353641, 55078876, 50509277, 66265063






தமுமுக – மமக அஹமதி கிளை நடத்திய மாபெரும் ஷஹர் நிகழ்ச்சி

இறைவனின் திருப்பெயரால்

தமுமுக – மமக அஹமதி கிளை நடத்திய மாபெரும் ஷஹர்  நிகழ்ச்சி...!!!

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் குவைத் மண்டலம் அஹமதி கிளை சார்பாக இன்று 17.06.2016 வெள்ளி கிழமை அதிகாலை 1.00 மணிக்கு மாபெரும் ஷஹர்  நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக கிளை துணை தலைவர் சகோ: சலீம் அவர்களின் தலைமயில் நடைபெற்றது.

கிளை தலைவர் பாண்டிச்சேரி ஷாம் ஹமீது, கிளை பொருளாலர் ஷானவாஸ் மற்றும் சங்கை முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிளை செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார். 

கிளையின் தமுமுக செயலாளர் கூத்தாநல்லூர் ஷாகுல் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சகோ: தஞ்சை பாதுஷா அவர்கள் ரமலானின் சிறப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இருதியாக கிளையின் மமக செயலாளர் சங்கை நஜீர் அவர்களின் நன்றியுரையூடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

என்டென்றும் மக்கள் பணியில் 

சமுதாய ஊழியர்கள் 
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் 
குவைத் மண்டலம் – அஹமதி கிளை 
தொடர்புக்கு:50777147, 55717626, 55131381




19 March 2016

மமகவின் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாந

தண

அல்லாஹு அக்பர்!!! அல்லாஹு அக்பர்!!!


மமகவின் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டில்...


அலை அலையாய் ஆர்ப்பறித்தெழுந்த மக்கள்வெள்ளம்...


எழுச்சிக்கு சான்றாய் திகழ்ந்தது!!


04/03/2016 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் குவைத் மண்டலம் மமக சார்பில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு ஈருலக நாயன் ஏக வல்ல இறைவனின் மாபெரும் கிருபையால் சால்மியா இந்தியன் மாடல் ஸ்கூல் உள் அரங்கத்தில் ஆர்ப்பரித்து மக்கள் நிறைந்து மாபெரும் எழுச்சியுடன் மாலை 5:30 மணியளவில் துவங்கி நடைபெற்றது.


மாநாட்டு நிகழ்வின் துவக்கமாக மண்டல பொருலாளர் பெருவளநல்லூர் அப்துல் சுக்கூர் இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார்கள்.


மமக மண்டல செயலாளர் பந்தல்குடி சம்சுதீன் மாநாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.


மண்டல கல்விகுழு செயலாளர் தஞ்சை செய்யது முகம்மது அக்பர் வரவேற்ப்புரை ஆற்றினார்கள்.


ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டிற்க்கு தலைமை கழக ஆலோசகர் எஸ்.கே சம்சுதீன் ஹஜ்ரத் மற்றும் மண்டல செயலாளர் லால்குடி ஜபருல்லாகான் முன்னிலை வகித்தனர்.


தமுமுக மமக குவைத் மண்டல தலைவர் தஞ்சை பாரூக் மஹராஜ் DAE.,B.Sc.,MBA., தலைமையுரை ஆற்றினார்கள்.


மாநில தலைமையில் இருந்து சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹச்.ஜவாஹிருல்லா MBA., M.phil.., Ph.d, MLA அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்கள்.


டி.வி.எஸ் குழும உரிமையாளர் சகோதரர் Dr.ஹைதர் அலி அவர்கள் கருத்துரை ஆற்றினார்கள்.


வாழ்துரையினை வெல்டன்_ முகம்மது கெளஸ் அவர்கள் வெல்டன் புரோமோட்டர்ஸ்
நஜீர் அஹமது அவர்கள் சீமாஸ் ரியாலிட்டி(பி)லிட் சென்னை தர்மபிரகாசம் Bsc மண்டல மமக துணைச் செயலாளர் அவர்கள்
எருமபட்டி கமருதீன் (மண்டல பேச்சாளர்) ஆகியோர்கள் வழங்கினர்.


மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் கஜ்ஜாலி நன்றியுரை ஆற்றினார்கள்.


மாபெரும் மக்கள் பெரும்திரளில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டில் தாய்க்கழக தொண்டர்கள் மனிதநேய சொந்தங்கள் தொப்புள்கொடி உறவுகளான பிற அமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் என அரங்கத்திற்குள்ளும் வெளியிலும் அமர்ந்து மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இதில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகளும் கலந்துகொண்டனர் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு இறைவனின் கிருபையால் இனிதாய் நிறைவு பெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்


என்றென்றும் மக்கள் பணியில். 


சமுதாய ஊழியர்கள் 
தமுமுக-மமக குவைத் மண்டலம்

தொடர்புக்கு: 66353641510009565535376166265063.

14 January 2016

#தமுமுக_அப்துல்லா_முபாரக்_கிளை_நிர்வாக_சீரமைப்பு!!!

#தமுமுக_அப்துல்லா_முபாரக்_கிளை_நிர்வாக_சீரமைப்பு!!!

தமுமுக குவைத் மண்டலம் அப்துல்லா முபாரக் கிளை நிர்வாக சீரமைப்பு குவைத் மண்டல தலைவர் தஞ்சை பாரூக் மகராஜ் அவர்களின் தலைமையில் 13.01.2016 இரவு சிறப்பாக நடைபெற்றது:

கீழ்க்கண்ட சகோதரர்கள்  புதிய நிருவகிகளாக நியமிக்கபட்டர்கள்:

கிளை தலைவர்: நெல்லிக்குப்பம் ராஜா(எ) செய்யது அலி

கிளை துணை தலைவர்:பாண்டிச்சேரி யாசின் 

கிளை தமுமுக செயலாளர்: திருவாரூர் அப்பாஸ் 

கிளை தமுமுக துணை செயலாளர்: திட்டச்சேரி பாஷா 

கிளை மமக செயலாளர்: நாகர்கோவில் செல்வம் 
 
கிளை பொருளாளர்: காரைக்கால் தீன் 

கிளை இரத்ததான பொறுப்பாளர்: லப்பைகுடி பாபு 

கிளை மக்கள் உரிமை பொறுப்பாளர்: பாண்டிச்சேரி அபு 

கிளை தொண்டரணி செயலாளர்: நெடுங்காடு உதயகுமார் 

கிளை நிருவாகிகளுக்கு தமுமுக-மமக செயல்பாடுகளைபற்றி மண்டல மமக துணை செயலாளர் சென்னை தர்மபிரகாஷ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்..

தமுமுக மமக செயல்பாடுகளை கடந்த ஆறுமாதகாலமாக கவனித்த சகோ: செல்வம் மற்றும் குமார் அவர்களுக்கும் மண்டல தலைவர் தஞ்சை பாரூக் மகராஜ் அவர்களும், மண்டல மமக துணை செயலாளர் சென்னை தர்மபிரகாஷ் அவர்களும் சால்வே அணிவித்து அவர்களை கண்ணியபடுதினார்கள்.

2016ம் ஆண்டு நாள்காட்டியை மண்டல பொருளாளர் பெருவலனல்லூர் அப்துல் சுக்கூர் அவர்கள் வெளியிட கிளை தலைவர் நெல்லிக்குப்பம் ராஜா(எ) செய்யது அலி அவர்கள் பெற்றுகொன்டர்கள்.

அல்ஹம்துல்லில்லாஹ்... 

என்றென்றும் மக்கள் பணியில். 
சமுதாய ஊழியர்கள் 
தமுமுக குவைத் மண்டலம் 
மனிதநேய மக்கள் கட்சி 
தொடர்புக்கு: 66353641, 51000956, 55353761, 66265063.



படியுங்கள்...! பரப்புங்கள்...!

படியுங்கள்...!    பரப்புங்கள்...!